பிரதான செய்திகள்

மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம்

(ஹைதர் அலி)

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரின் பூரண முயற்சியினால் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள நோயாளர் விடுதியானது மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

 இவ்வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றினை பெற்றுத்தருமாறு சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிமிடம் மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். 

இதற்கினங்க  2018ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து வைத்தியசாலைக்கான கட்டிடத் தேவைப்பாட்டினை நிவர்த்தி செய்துதருவதாக பிரதி அமைச்சர் வாக்குறுதியளித்திருந்தார்.

அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு 2017.10.25ஆந்திகதி கட்டடத் திணைக்களத்திலிருந்து வைத்தியசாலைக்கு வருகைதந்த பொறியியலாளர் வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வைத்தியசாலையில் கட்டிடம் அமையப்பெறவுள்ள இடத்தினையும் பார்வையிட்டுச் சென்றிருந்தார்.  

அதன் தொடர் நடவடிக்கையாக செயற்பட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் இன்று (04) மட்டக்களப்பில் அமையப்பெற்றுள்ள கட்டடத் திணைக்களத்திற்கு நேரடியாகச்சென்று நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்ட வைத்தியசாலையின் வரைபடம்  (Survey plan) அடங்கிய ஆவணத்தினை கையளித்ததுடன், இன்றுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர். 

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment