(பைஷல் இஸ்மாயில்)
கடந்த 2016 ஆம் ஆண்டு (CBG) வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ஏறாவூர் TC குவாடஸ் மைதானம் செப்பனிடப்பட்டு சில குறைபாடுகளுடன் முடிவுருத்தப்பட்டிருந்தன.
இந்நிலைமையில், மைதானத்தை செப்பனிட்ட ஒப்பந்தக்காரரினால் குறித்த இவ்வேலைக்கான பிடிகாசுக் கொடுப்பனவும் கோரப்பட்டிருந்தன. இதனைக் கவனத்திற்கொண்ட ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் குறித்த மைதானத்தின் நிலைமையினை பார்வையிடுவதற்காக உடனடி கள விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.
அதற்கமைவாக, மைதானத்தில் இருக்கின்ற குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்த பின்னர் ஒப்பந்தக்காரரின் மீதப் பணத்தை விடுவிப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தருக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

0 comments:
Post a Comment