பிரதான செய்திகள்

கஜேந்திரகுமாருக்கு வீ. ஆனந்தசங்கரி பகிரங்க அழைப்பு

நாட்டுப்பற்று இருந்தால் தமது புதிய கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு வீ. ஆனந்தசங்கரி கஜேந்திரகுமாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

கடந்தகால கூட்டமைப்பு போல் தனிக்கட்சி அதிகாரம் இங்கில்லை. எனவே பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதனை விடுத்து ஒன்றிணையுமாறு அவர் கோரியுள்ளார். 

நேற்று (08) கிளிநொச்சியில் தனது அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவா் இதனைக் குறிப்பிட்டார். 

கஜேந்திரகுமார் அரசியலில் பால்குடி நான் பாராளுமன்ற போகும் போது அவா் பிறக்கவில்லை ஆகவே அவா் வாய் திறக்கும் போது யோசித்துவிட்டு திறக்க வேண்டும். 

நான் கஜேந்திரகுமாரின் தந்தை பேரன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்தவன். ஆகவே, வரலாறு தெரியாது பேசுவது சிறுபிள்ளைதனமானது. 

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமஸ்டி தீர்வை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டவா் அவருக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்டார். 

ஆனால் கஜேந்திரகுமார் தரப்பினர் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை வலியுத்தினார்கள். இது சமஸ்டிக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதே. இதனை அவா் மறந்திருக்க முடியாது. 

வரலாறு இப்படியிருக்க நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை பேசவில்லை என்று கூறுவது சுத்தப் பொய்யான கருத்தாகும். 

நாங்கள் இன்றும் சமஸ்டியை வலியுறுத்தி வருகின்றோம், அல்லது சமஸ்டியை எட்டும் வரைக்கும் இந்திய முறையிலான தீர்வை வலியுறுத்தியிருகின்றேன் என ஆனந்தசங்கரி தெரிவித்தார். 

கஜேந்திரகுமாரின் தந்தை மற்றும் அவரின் பேரன் ஆகியோர் உன்னதமான தலைவா்கள் எனவே கஜேந்திரகுமார் இவா்களின் வரலாறுகளை அறிந்து பேசவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார் 
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment