பிரதான செய்திகள்

உலகில் சிறந்தவா்களில் 500வது இடத்தினை வகிப்பவர் இலங்கையில்

கலாநிதி  முப்தி இஸ்மாயில்  மென்க்  5 நாட்கள்  இலங்கையில் தங்கியிருப்பாா். இவா் உலகின் சிறந்தவா்களில்  500 வது இடத்தினை பெற்றவா், சிம்பாபே நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவா். 

உலக நாடுகளில்  இஸ்லாம், மற்றும் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி கோடிக்கணக்கான மக்களை கவர்ந்தவா்.  

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் தெஹிவளை ,மற்றும் ஜாவத்தை, கொள்ளுப்பிட்டி ஆகிய பள்ளிவாசல்களில் உரையாற்றவுள்ளாா்.

நேற்று (7) இரவு வெள்ளவத்தை மெரைவ்  ஹோட்டலில் அவா் எழுதிய ஆங்கில மொழியிலான "Motivational Moments நுால் வெளியீட்டு வைக்கப்பட்டது. 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவரும்  தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளா்  சட்டத்தரணி  சுதா்சன குணவர்த்தன் கலந்து கொண்டாா். 

நுாலின் முதற்பிரதி இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி  பொதுபலசேன ஸ்தாபகா் திலந்த விதானகே  மற்றும் ஊடக நிறுவனங்களின் தாலவா்கள் பிரதம ஆசிரியா்களுக்கும் இவரது நுால்கள் வழங்கிவைக்கப்பட்டது.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment