பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கே.எம்.அஸ்லம் கடமையேற்பு

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கே.எம்.அஸ்லம், உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை இன்று (12) காலை 10.15 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய காலநிதி எம்.ஏ.நபீல், வைத்தியர்களான எம்.பீ.எம்.றஜீஸ், எஸ்.எம்.றிசாட், பஸ்மினா அறூஸ், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் பதவி உயர்வு பெற்று நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த பல வருடங்களாக ஆயுர்வேத சுதேச வைத்தியத்துறையில் பல வைத்திய சேவைகளைச் செய்த இவர், மருதமுனை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் 8 வருடங்களாக பொறுப்பதிகாரியாக நிர்வாகம் வகித்து வந்த நிலையில் மேற்படிப்புக்காக கடந்த 3 வருடங்கள் இந்தியா சென்று டொக்டர் ஒப் மெடிசின் (MD) பட்டத்தை பூர்த்தி செய்துவந்த நிலைமையிலேயே இவருக்கான இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment