பிரதான செய்திகள்

கிழக்கில் ஜே.வி.பி, மஹிந்த அணி போட்டி: கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைளுக்கும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கும் போட்டியிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியான ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இன்று (05) காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தலைமையிலான அணியினர், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம். சசீலனிடம் கட்டுப்பணத்தை செலுத்தினர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். அமரசிங்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார், முன்னாள் குருணாகல் மாநகர சபை உறுப்பினர் அப்துல் சத்தார் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி கட்சி ஏறாவூர் நகரசபை, ஆரையம்பதி, கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தினர். இதில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று கட்டுபணத்தை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment