பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சல்: சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம்

முல்லைத்தீவு நகரப் பகுதியில் பரவி வருகின்ற ஒருவகை காய்ச்சல் காரணமாக, கடந்த மூன்று வார காலப் பகுதியில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில், மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆய்வுகள் குறித்து உடனடி நடவடிக்கைகளையும், மேலும் இந் நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் உடன் எடுக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

வடக்கில் டெங்கு நோயாளர்களது அதிகரிப்பு தொடர்பிலும், மலேரியா நோய் பரப்புகின்ற நுளம்புகளின் பெருக்கம் தொடர்பிலும் நான் ஏற்கனவே சுகாதார அமைச்சின் அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது மேற்படி மர்மக் காய்ச்சல் முல்லைத்தீவு மாட்டத்தில் ஒன்பது உயிர்களை பலியெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. சுமார் மூன்று காலப் பகுதிக்குள் 9 பேர் உயிரிழந்தமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாகவே காணப்படுகின்றது. எனவே, இவ் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. 

உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இன்மையும், மாகாண சபையின் வினைத்திறன் இன்மையும் காரணமாக வடக்கு மாகாணத்தில் பல்வேறு நோய்கள் பரவுகின்ற நிலைமையினையே காணக்கூடியதாக இருக்கின்ற சூழலில், வடக்கின் சுகாதார நிலைமை குறித்து மத்திய அரசும் அதிக அவதானமெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 

அந்த வகையில், இவ் விடயம் தொடர்பில் உடனடி அவதானமெடுத்து, மேற்படி நோயின் காரணம் கண்டறியப்படவும், இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், நோய்க்கான மருந்து வகைகள் பற்றாக்குறை அல்லது தேவைகள் இருப்பின் அவற்றை விரைந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா சுகாதார அமைச்சரைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment