இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் கடந்த ஏப்ரல் 22, 23 மற்றும் 29ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட இலங்கை கணக்காளர் சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித அறிவித்துள்ளார்.
இந்தப் பரீட்சை மீண்டும் பிரிதொரு தினத்தில் நடாத்தப்படுவதுடன், விண்ணபித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அண்மையில் கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டும், பிரதி பரீட்சைகள் ஆணையாளர்(இரகசியப் பிரிவு) இடைநிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment