(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதியோரங்களில் இரவிலும் பகல் நேரங்களிலும் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா புஹாரி சந்தி தொடக்கம் டீ சந்தி மட்டக்களப்பு பிரதான வீதி உட்பட உள்வீதிகளிலும் கட்டாக்காளி மாடுகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வீதிகளை மலம் கழித்து நாசமாக்கப்படுவதும் இரவு நேரங்களில் போதிய மின்வெளிச்சமின்மையாலும் வீதி விபத்துக்கள் மாடுகளுடன் மோதுண்டு நடைபெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வீதி விபத்துக்கள் உட்பட பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் மக்களால் தெரிவிக்கப்படுகிறது. கிண்ணியா நகர சபையினால் அண்மையில் இவ்விடயம் தொடர்பில் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல் எனும் அறிவித்தல் ஊடகங்களில் விடுக்கப்பட்டும் உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தும் இது வரைக்கும் நடவடிக்கைகளுக்கு தீர்வின்மையால் கட்டாக்காளி மாடுகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
எனவே கிண்ணியா நகர சபை இவ்விடயம் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு கட்டாக்காளி மாடுகளை வீதியோரங்களில் நடமாடுவதை கட்டுப்படுத்துமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

0 comments:
Post a Comment