சின்னத்தம்பி ஆமினாவின் புதல்வரான அலியார் முஹம்மது ஸரீப் சுபைர் , 1968.05.28 ம் திகதி பிறந்தார் . இவர் தனது பாடசாலை கல்வியை அல் அஸ்ஹர் வித்தியாலயத்திலும் , அந்நூர் தேசிய பாடசாலையிலும் , மற்றும் அலிகார் தேசிய பாடசாலையிலும் கல்வியை தொடர்ந்தார் . இளம் வயதிலேயே சமூக சேவைகளில் நாட்டம் கொண்டவராக இவர் திகழ்ந்தார் . அதனடிப்படையில் இவர் ஏறாவூர் கிராம அபிவிருத்தி சங்கச்தின் தலைவராகவும் , ஏறாவூர் சமூக சேவை நற்பனி மன்றத்தின் தலைவராகவும் பிரவேசித்த இவர் அப்பகுதி மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.
அரசியலில் அவர்...
தனது ஆரம்ப அரசியலாக மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுடைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏறாவூர் இளைஞர் அமைப்பாளராக செயற்பட்ட அவர். தலைவரின் மறைவின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இனைந்து கொண்டு கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார்.
2005 ஆம் ஆண்டு ஏறாவூர் பிரதேச சபையில் போட்டியிட்டு ஏறாவூர் மக்களின் அமோக வாக்குகளைப் பெற்று பிரதேச சபையில் எதிர் கட்சி தலைவராக அமர்ந்தார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் . இவர் 2010 -2012 வரை கிழக்குமாகாண சுகாதார மற்றும் சுதேச, விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து ஏறாவூர் உட்பட கிழக்கின் பல பகுதிகளிலும் அபிவிருத்தி செய்தார்.
அக்காலப் பகுதிகளில் அவரால்,
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஏறாவூரிலும்
மீராகேணி கால்நடை வைத்தியசாலை ,
ஏறாவூர் சமூக சேவை கட்டிடம் ,
உறுகாமம் மீள் குடியேற்றம் ,
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ,
காணிப்பிரச்சினை ,
வீதி அபிவிருத்திகளை செய்து பல அபிவிருத்திகளுக்கு சொந்தக்காரனாவார் .
2012 ஆம் ஆண்டு கிழக்குமாகாண சபையின் பிரதி தவிசாளராக பதவியிலிருந்த அவரின் பதவி 2015 இல் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரினால் இவரின் பிரதி தவிசாளர் பதவி பறிக்கப்பட்டது .
மேலும் ஏறாவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழுவின் இனைத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார் .
தற்போது இவர் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் . இறுதியாக ஹிதாயத் நகர் மக்களின் நீண்டநாள் கணவாக இருந்த வீதியினை ஒரு கோடியே நாற்பது லச்சம் ரூபா செலவில் அந்த நகர் மக்களுக்குஂ அமைத்தார் . அதேபோன்று மீராகேணி கலந்தர் வீதியையும் அந்நகர் மக்களின் சிரமம் கருதி ஒரு கோடியே என்பது இலட்சம் ரூபா செலவில் அமைத்துக்கொடுத்தார் .

0 comments:
Post a Comment