நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை உடனடியாக கைதுசெய்யுமாறு ஹட்டன் நீதிவான் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸாருக்கே இன்று (11) இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி மஸ்கெலியா-கவரவில தோட்டத்திலுள்ள மரண வீடொன்றில் தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எம்.ராமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு இன்று(11) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஜீவன் தொண்டமான உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை பிணையில் விடுவிக்கப்பட்ட மத்திய மாகாண கல்வியமைச்சர் உள்ளிட்ட நால்வரையும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நான்காம் திகதி (04.04.2018) மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது

0 comments:
Post a Comment