(கே.ஏ.ஹமீட், ஏ.ஜீ.எம். இர்பான்)
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தின் 2017 ஆம் ஆண்டின் “அறபாவின் ஆளுமைகள்” விருதும், பரிசளிப்பு விழாவும் பாடசாலை அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இன்று (5) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, மற்றும் ஏ.எல்.முஹம்மட் நஸீர் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றகுமத்துல்லா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2017 இன் அதிதிகளாகும் “அறபாவின் ஆளுமைகள்” விருது ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் ஆகியோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பாடசாலையில் விஷேட செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதேவேளை கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் 3 இலட்சம் ரூபா நிதியின் கீழ் பாடசாலைக்கான தளபாடங்களுடன், மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் நிதியொதுக்கீட்டின் கீழ் 175 மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் ஏ.எல்.எம்.நசீர் ஆகியோரினால் பரிசில்கள் மற்றும் விருதுகள் வழங்கி பலரும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment