பிரதான செய்திகள்

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்

விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹலோ' படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார் 'இயக்குநர் ப்ரியதர்ஷன் - லிசி' மகள் கல்யாணி ப்ரியதர்ஷன்.

'24' படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் தெலுங்கில் 'ஹலோ' என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வருகிறார் விக்ரம் குமார். நாகார்ஜுன் தயாரித்து வரும் இப்படத்தின் நாயகனாக அவருடைய இரண்டாவது மகன் அகில் நடித்து வருகிறார்.

பி.எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்ய, அனுப் ரூபன்ஸ் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அகிலுக்கு நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கிறார். இவர் இந்திய திரையுலகில் முன்னணி இயக்குநராக உள்ள ப்ரியதர்ஷன் மற்றும் லிசி ஆகியோரின் மகள் ஆவார்.

'ஹலோ' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். தமிழ் திரையுலகிலும் பல்வேறு இயக்குநர்களிடம் அவரை அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், தெலுங்கு திரையுலகின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இப்படம் டிசம்பர் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment