மூவின மக்களினதும் ஆதரவைப் பெற்றவன் என்ற வகையில் மேயர் பதவியில் வெற்றிபெற முடியுமென நுஆ கட்சியின் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் பூரண சம்மத்துடன் மேயர் வேட்பாளராக நான் நிறுத்தப்படுகிறேன்.
சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் முதற்றடவையாக, ஒரு கட்சியின் செயலாளரான என்னை கொழும்பு மேயர் வேட்பாளராக நிறுத்தியுள்ளமை சிறப்புக்குரியது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்புமுறையில் இடம்பெறுவதால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விட்டு மேயர் பதவியை என்னால் ஜெயிக்கமுடியும்.
ரோஸி சேனநாயக்காவுக்கு, கிறிஸ்தவர்களின் வாக்குகள் கிடைக்கும். எனினும், எனக்கு மூவின மக்களின் வாக்குகளும் கிடைக்கும். அதனால், கொழும்பு மேயர் வேட்பாளராக என்னால் ஜெயிக்க முடியும் எனவும் ஆசாத் சாலி தெரிவித்தார்.

0 comments:
Post a Comment