கிளிநொச்சி, இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு நீர்ப்பாசன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தக்காலத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குறித்த புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நீர்ப்பாசன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவத்தினர் வணங்குவதற்காகவே குறித்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டதாகவும், தற்போது குறித்த இடத்தில் இராணுவத்தினர் இல்லாத காரணத்தினால் புத்தர் சிலை இருப்பது பிரயோசனமற்ற ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 3200 மில்லியன் ரூபா செலவில் இரணைமடு நீர்த்தேக்கம் அபிவிருத்தி மற்றும் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நீர் செல்லும் கதவுகளை விரிவாக்க இந்தப் புத்தர் சிலை தடையாகவுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் குறித்த புத்தர் சிலையை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment