பிரதான செய்திகள்

(வீடியோ) கல்குடா - செம்மண்ணோடை பிரதேசத்தில் கள்வர்கள் நடமாட்டம் அதிகரிப்பு: இளைஞர்கள் விழிப்பாக இருக்குமாறு உத்தரவு

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

கடந்த சில வாரங்களாக கல்குடா, கோறளைப்பற்று மத்தி நிருவாக எல்லைக்குட்பட்ட செம்மண்ணோடை கிராமத்தில் இரவு நேரங்களில் கள்வர்களின் நடமாட்டம் மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தும் பல அசெளகரியங்களுக்கு உள்ளாகியும் இருப்பதனை அவதானிக்க முடிகிறது. 

அது மட்டுமல்லாமல் குறித்த திருட்டு சம்பவங்களினாலும், கள்வர்களின் நடமாட்டத்தினாலும் குறித்த பிரதேசத்தினை அண்டியுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை போன்ற கிராமங்களில் வசிக்கின்ற மக்களும் இரவு நேரங்களில் திருடர்களுக்கு அச்சப்பட்டு வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ஆகவே இவ்வாறான நிலையினை எவ்வாறு கட்டுப்படுத்துவது.? அல்லது இதற்கான காரணங்கள் எதுவாக இருக்கலாம்.? என்பது சமப்ந்தமாக குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் அன்வர் சதாதினை வினவிய பொழுது. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபவர்கள் போதைவஸ்து பாவனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

மேலும் வாழைச்சேனை பொலிசாருடன் சேர்ந்து பதுகாப்பு நிலையினை உசார்படுத்தியுள்ளதுடன் ,கள்வர்களின் நடமாட்டம் எதனால் ஏற்பட்டுள்ளது என்பது சமபந்தமாக பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் இளைஞர்களை உச்சார் நிலையில் இருப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

செம்மண்ணோடை பிரதேசத்து கள்வர்கள் நடமாட்டம் – திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கிராம சேவக உத்தியோகத்தர் அன்வர் சதாத் தெரிவிக்கும் கருத்துக்கள் அடக்கிய கணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment