(ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான்)
கிழக்கு அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு சத்துண ஹோட்டலில் நேற்று (07) இடம்பெற்றது.
இச்செயலமர்வில் வளவாளராக சட்டத்தரனி கே.ஐங்கரன் கலந்துகொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் விளக்கமளித்தார்.
இதன்போது ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் சில கருத்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment