(எப்.முபாரக்)
திருகோணமலை மட்கோ அல் பாலாஹ் முன் பள்ளி பாலர் பாடசாலையின் கலை நிகழ்வு திருகோணமலை சாஹிரா கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று (1) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதிகளாக ஸாஹிரா கல்லூரியின் அதிபர் அலிசப்ரி, மௌலவி பஹார்தீன், மௌலவி ஜஸீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பெற்றார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 
அல் பாலாஹ் முன் பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர்களின் கலை,கலாசார நிகழ்வுகள் இதன்போது அரங்கேற்றப்பட்டதுடன், அதிதிகளினால் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.      
 




 
 
0 comments:
Post a Comment