ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல் 2018 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் வாலெண்டினா மேட்வெய்ன்கோ அறிவித்துள்ளார்.
ரஷ்ய நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது.
இதையடுத்து அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.
இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் விளாடிமிர் புட்டின் மீண்டும் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் வருகிற 2018 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலை நடத்த பாராளுமன்ற மேல்சபையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
இதையடுத்து ஜனாதிபதித் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்ய பாராளுமன்ற சபாநாயகர் வாலெண்டினா மேட்வெய்ன்கோ அறிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment