சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் நாவிதன்வெளி பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய, இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1981ஆம் ஆண்டு சேர் ராசிக் பரீட் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்ட ஹசன் அலி 2009ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் ஹசன் அலியினால் சம்மாந்துறை தொகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் நியமனத்தினை வழங்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு சம்மாந்துறை பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment