பிரதான செய்திகள்

இலங்கை மீனவர்கள் மாலைதீவில் கைது..!

எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையின் மீனவப் படகுகள் இரண்டையும் அதில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பத்து மீனவர்களையும் மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோரப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர்.

மாலைதீவின் கடல் எல்லைக்கு உட்பட்ட வாவு அட்டோல் பகுதியில் இவ்விரண்டு படகுகளும் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. இதை, மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோர ரோந்துப் படகு ஒன்று அவதானித்தது.

இது பற்றிய தகவல்களை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அறியத் தந்த பின்னரே இரண்டு படகுகளையும் கைப்பற்றியதுடன், அதில் இருந்த பத்து மீனவர்களையும் கைது செய்தனர்.

தற்போது, இரண்டு படகுகளும் மீனவர்களும் மாலைதீவின் தலைநகரான மாலேக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment