வெளிநாட்டில் சொத்து வாங்கிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய உடன் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து வாங்கிய வழக்கை இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றம் விசாரிக்கிறது.
ஆனால் மனைவியின் கேன்சர் சிகிச்சைக்காக லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் நேரடியாக ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்குமாறு நவாஸ் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதையடுத்து நீதிபதி ஏற்கவில்லை. நவாஸ் ஷெரீப் மீது கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதி விசாரணையை வரும் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். நவாஸ் ஷெரீப் வெளிநாடுகளில் சொத்து வாங்கியதே பனமா ரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தன. அதையடுத்து அவரது பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. நவாஸ் ஷெரீப், மகள் மரியம் மற்றும் அவரது கணவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு நடக்கிறது.

0 comments:
Post a Comment