பிரதான செய்திகள்

உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில்



உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெயர் சிங்கப்பூர் பாஸ்போர்ட்க்கு கிடைத்துள்ளது. இந்த பாஸ்போர்ட் மூலம் 159 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் குறித்த தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் வரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளின் பட்டியலில் 159 புள்ளிகளுடன் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. 158 புள்ளிகள் பெற்று ஜெர்மனி இரண்டாம் இடத்தில் உள்ளது. 157 புள்ளிகளுடன்  சுவீடன், தென்கொரியா மூன்றாம் இடத்திலும், 156  புள்ளிகளுடன் பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின். நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகள் 4-ம் இடத்திலும் உள்ளன. 155 புள்ளி களுடன் லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, போர்சுக்கல் 5-ம் இடத்தில் உள்ளன.

154 புள்ளிகள் பெற்று  மலேசியா, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆறாம் இடத்தில் உள்ளன. 153 புள்ளிகளுடன் கிரீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா 7 ம் இடத்தில் உள்ளன. 152  புள்ளிகள் பெற்று  மால்டா, ஐஸ்லாந்து, செக் குடியரசு 8 வது இடத்தில் உள்ளன. 150 புள்ளிகளுடன் ஹங்கேரி 9 வது இடத்தில் உள்ளது. 149 புள்ளிகள் பெற்று சுலோவேனியா, சுலோவாக்கியா, போலந்து, லுதுவேனியா, லாத்வியா நாடுகள் 10-ம் இடத்தில் உள்ளன. இதுகுறித்து ஆர்டான் கேபிட்டல் நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலக நிர்வாகி பிலிப்பி மே கூறும்போது, முதல் முறையாக ஆசிய நாடு ஒன்று (சிங்கப்பூர்), சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது என்று தெரிவித்தார். இந்த பட்டியலில் இந்தியா 75-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment