கடந்த செவ்வாய்க்கிழமை (24) வெளியாகிய கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டிப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2,268 பேர் சித்தியடைந்தும் 1,440 பேருக்கே நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனடிப்படையில் நடத்தப்பட்ட பொது அறிவு மற்றும் பொது உளச்சார்பு பரீட்சைகளில் இரு பாடங்களிலும் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றும் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு நியமனம் வழங்கப்படாத நிலையுள்ளதாக சித்தியடைந்த பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சித்தியடைந்த பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனங்களை வழங்குமாறு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:
Post a Comment