பிரதான செய்திகள்

கருணா அம்மான் விடுதலை

அரசாங்கத்திற்கு சொந்தமான அதிசொகுசு வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கிலிருருந்து கருணா என அழைக்கப்படும், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,   விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில், வி. முரளிதரன் பிரதி அமைச்சராக இருந்த வேளையில் ரூபா 9 கோடி பெறுமதியான, ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனத்தை பெற்று உரிய முறையில் கையளிக்காது முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில், நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வாகனம் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும், முன்னாள் பிரதியமைச்சரினால் கையளிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக பிரதான நீதவான் லால் ரணசிங்க உத்தரவிட்டார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment