அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 18வது சிரார்த்த தினத்தை நினைவூட்டும் நிகழ்வு இன்று (30) ஜனாதிபதி செயலகத்தில் (பழைய பாராளுமன்றம்) இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தநிகழ்வில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் , ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் முக்கியஸ்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்

0 comments:
Post a Comment