இறக்காமத்தில் அண்மையில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பத்துக்கு வீடு கட்டித்தருவதாக அ.இ.மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியூதீனால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய முதற்கட்டமாக அக்குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
உயிர் இழந்த மூன்று குடும்பங்களையும் அண்மையில் நேரில் சந்தித்த முன்னாள் கல்முனை மாநகர மேயரும் அ.இ.ம.கா.பிரதி தேசிய அமைப்பாளரும், லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ் மீராசாஹிப் அக்குடும்ப உறுப்பினர்களுக்கு காசோலையினை வழங்கி வைத்தார்.
இதன்போது அ.இ.ம.காங்கிரசின் இறக்காமம் பிரததேச அமைப்பாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment