பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சர் சுகம்பெறவேண்டும் என்று - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் கபூர்


பைஷல் இஸ்மாயில் -

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் அண்மையில் திடீர் என சுகவீனமுற்று உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சத்திரசிகிச்சைகுள்ளாக்கப்பட்டுள்ளார் என அறிந்து ஆச்சரியமுற்றேன். இவர் விரைவில்நல்ல சுகம்பெற்று மீண்டும் நலமுடன் நன்றாக பல்லாண்டுகள் இம்மண்ணில் வாழ வல்ல இறைவனை மனமாறப் பிராத்திக்கிறேன் என முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொதுச் செயலாளரும் உயர்பீட அரசியல் விவகார பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாம் இருவரும் வேவ்வேறு பாதைகளில் பயணித்தாலும் எமது ஆரம்ப அரசியல் பாசறை ஒன்றே ஒன்றுதான் என்பதில் எமக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் இல்லை. எது எப்படி இருப்பினும் எனக்கு இன்றும் நன்றாக ஞாபகமிருக்கிறது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களுடன் நாம் மூவரும் இணைந்து இரண்டரகலந்து “காங்ரஸ்” கட்சியை கஸ்டமான கால கட்டங்களில் கட்டி எழுப்பிய அந்நாட்களை இன்நாளில் நான் நன்றியுடன் நினைத்துப்பாக்கிறேன்.

கொழும்பு 12  டாம் வீதியில் அப்போது அமைந்திருந்த எமது கட்சித் தலைமை காரியாலயத்தில் பழைய பத்திரிகைகளை பாய்களாக தரையில் விரித்திருந்து பல கட்சிக் கூட்டங்களை அவ்வப்போது நடாத்திய அக்காலப்பகுதியை என்னால் இன்னும்தான் மறக்கமுடியவில்லை. இவைகள் பற்றி இன்றுள்ளவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமும் இல்லை. அத்துடன் எனது ‘வழக்கில்’ முக்கிய சாட்சியாக இன்று இருக்க வேண்டிய இவர் இப்போது எங்களுடன் இல்லையே என எண்ணிப்பார்க்கும்போது பெரும் மனக்குறைவாகவும் வேதனையாகவும்தான் இருக்கின்றது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment