பிரதான செய்திகள்

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 3 பேர் காயம்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 220 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

கொழும்பு குணசிங்கபுர பகுதியிலிருந்து ஹட்டனிற்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரம்பாதெனிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர். 

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதோடு, மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இவ்வாறு விபத்துக்குள்ளாகியவர்கள் நோட்டன்பிரிட்ஜ், கொட்டகலை, பத்தனை போன்ற பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment