லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் பணம், இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கமைய, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷலில முணசிங்கவை எதிர்வரும் 25ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 comments:
Post a Comment