பிரதான செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்

முப்பத்து இரண்டு வருடங்களின் பின் அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.

கொழும்புத் துறைமுகத்தை நாளை (28) வந்தடையவுள்ள ‘த நிமிட்ஸ் கெரியர் ஸ்ட்ரைக் க்ரூப்’ என்ற இந்தக் கப்பல், அதன் துணைக் கப்பல்களுடன் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், 1985ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முதலாக ஒரு விமானம் தாங்கிக் கப்பல் இலங்கைக்கு வருவதன் மூலம், அண்மைக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

சுமார் 23 மாடிக் கட்டடத்தின் உயரத்தைக் கொண்ட இந்தக் கப்பலின் நீளம் 333 மீற்றர்கள். ஐயாயிரம் பேர் பயணிக்கக்கூடிய இந்தக் கப்பலின் சமையலறையில், நாளொன்றுக்கு பதினெட்டாயிரம் பேருக்கு உணவு சமைக்க முடியும்.

இலங்கை வரவுள்ள இந்தக் கப்பலின் வீரர்கள் இலங்கையின் தொண்டு நிறுவனங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் நடைபெறும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். அத்துடன், ஆயிரக்கணக்கான வீரர்களின் வருகையால் உள்நாட்டு வர்த்தகர்கள் பலனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment