மஹிந்த ராஜபக்ஷ சிறந்த தலைவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை, எனினும் அவர் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்ற தேவை இல்லை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டியது எமது கடமை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக தெரிவித்தார். மஹிந்தவை நிராகரித்து அரசியலில் பயணிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போதே இக் கருத்தினை தெரிவித்தார்.

0 comments:
Post a Comment