காத்தான்குடியில் மாணவி ஒருவரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டமையை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகோரியும் காத்தான்குடியில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா வின் ஏற்பாட்டில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
மாணவிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை தேவையற்ற விதத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் முகநூல் பக்கங்களில் பிரசுரிப்பதை கண்டிப்பதாக இந்த ஆர்ப்பாட்டத் தின் போது தெரிவிக்கப்பட்டதுடன் காத்தான்குடியில் மாணவியொருவரின் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் பிரசுரித்தமையையும் இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கண்டித்தனர்.
சமூக வலைத்தளங்களில் காத்தான்குடி மாணவியொருவரின் புகைப்படங்களை பிரசுரித்த மாணவனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இதன் போது வலியுறுத்தினர். அவர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப் பினருமான சல்மா ஹம்சா, கருத்து தெரிவிக்கையில்...
காத்தான்குடியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாணவியொருவரை திருமணம் செய்வதாக கூறி அம்மாணவியை காதலித்த காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் குறித்த மாணவியை புகைப் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்க செய்து விட்டு தலை மறைவாகியுள்ளான். இதனால் அந்த மாணவியும் அந்த மாணவியின் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இது தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை சந்தித்து விடயங்களை தெரிவித்துள்ளேன். இந்த மாணவியை அவமானப்படுத்தி அந்த மாணவியின் புகைப்ப டங்களை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து விட்டு தலைமறைவாகியுள்ள குறித்த மாணவனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி சரியான தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்பதுடன் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை செய்வர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் இவ்வாறான பெண்களின் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பிரசுரிப்பதும் பெண்களுக்கெதிரான வன்மு றையாகும். இதன் மூலம் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றார் கள். இவைகள் கண்டிக்கப்படுவதுடன் இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment