பிரதான செய்திகள்

மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு விளக்கமறியல் - வவுனியாவில் சம்பவம்



வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் எனத் தெரிவித்து அச்சிறுமியின் தந்தைக்கு ஈச்சங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் வசித்துவந்த குடும்பமொன்றின் 13 வயதுச் சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தாயார் மூன்று தடவைகள் தனியார் வைத்தியசாலையில் ஆலோசனை பெற்றிருந்தார். சிறுமி உடல் பலவீனமாகவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதில் திருப்தியடையாத தாயார் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதன்போது அந்தச் சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது தாய் கூலி வேலைக்குச் செல்லும் நாட்களில், தந்தை வேலைமுடிந்து வீட்டில் நின்ற நேரங்களில் அவரால் அந்தச் சிறுமி துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டு இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஈச்சங்குளம் பொலிஸில் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைவாக 39 வயதுடைய அந்தச் சிறுமியின் தந்தை கைதுசெய்யப்பட்டார்.

அவர் வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment