பிரதான செய்திகள்

கிராம உத்தியோகத்தரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றிவந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தரின் சடலம் இன்று (31) நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. 

மட்டக்களப்பு மகிழுரைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தரான சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 28/10/2017 திகதி மரணமடைந்தவரின் உறவினர்களினால் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வானினால் குறித்த சடலத்தை தோண்டி எடுத்து விசேட பிரேத பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

குறித்த நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று (31) நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வான் முன்னிலையில் எருவில் மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு களுவாஞ்சிகுடி பொலிசார் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கிராம உத்தியோகத்தரான சோமசுந்தரம் விக்னேஸ்வரன், மகிழுர்முனையில் உள்ள குறுக்கு வீதியில் மின்சார தூண் ஒன்றில் மோதிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment