தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு அனுமத்திப் பத்திரம் அவசியமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கித்துல் மரத்திலிருந்து கித்துல் பாணி எடுப்பதற்கு குறித்த அனுமதிப்பத்திரம் தேவையில்லையென்றும் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு மாத்திரமே அனுமதிப்பத்திரம் தேவையெனவும் அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அனுமதிப்பத்திரத்தினை குறித்த பிரதேசங்களிலுள்ள கலால் திணைக்களத்திடமிருந்தும் பிரதேச செயலகத்திடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து அனுமதிப் பத்திரமில்லாது கள் இறக்குவதற்கு முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment