பிரதான செய்திகள்

அவசர விபத்து முதலுதவி சேவைக்கு ஹெலிகொப்டர்: அமைச்சர் ராஜித

அவ­சர விபத்­துக்­களின் போது விபத்­துக்­குட்­பட்­ட­வ­ருக்கு  சிகிச்­சை­ய­ளிக்­க­வென எதிர்­கா­லத்தில்  அம்­பி­யூலன்ஸ் சேவை­யுடன் அதி­ந­வீன  மற்றும் சகல வைத்­திய வச­தி­க­ளுடன் ஹெலி­கொப்டர்  சேவையும் விரைவில் நடை­மு­றைக்கு   கொண்­டு­வ­ரப்­படும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன  தெரி­வித்தார். 

முத­லு­தவி சேவைக்­கான உப­க­ர­ணங்­களை பாட­சா­லைகள் மற்றும் பிராந்­திய வைத்­திய நிலை­யங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்கும்  நிகழ்வு தொற்றா நோய் தடுப்பு பிரி­வினால்  இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நடத்­தப்­பட்­டது. 

இதன்போது பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரையாறுகையில்...

சிறந்த அபி­வி­ருத்தி அடைந்த நாடு­களை போன்ற சுகா­தார அபி­வி­ருத்தி கொண்ட நாடா­கிய இலங்­கையில், ‍இரு­தய நோய்­க­ளுக்கு அடுத்து அதி­க­ள­வான மர­ணத்தை தோற்­று­விப்­பது வீதி விபத்­துக்­க­ளாகும். ஆனால் விபத்­து­களின் போது விபத்­துக்­குட்­பட்­ட­வ­ருக்கு அவ­ச­ர­மாக முத­லு­தவி சேவை  கிடைக்­கு­மாயின் அவரின் உயி­ரா­பத்து குறைக்­கப்­படும். 

அதற்­கான ஒரு அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­யாக எதிர்­கா­லத்தில் அவ­சர முத­லு­தவி சேவையில் ஹெலி­கொப்­டரும் பென்ஸ் வாக­னங்­களும் பயன்­பாட்­டிற்கு கொண்­டு­வ­ரப்­படும். இந்­தி­யாவில் இருந்து இலங்­கைக்கு கிடைத்த 88அம்­பி­யூலன்ஸ் வாக­னங்­க­ளுடன் மேல­தி­க­மாக 250 வாக­னங்கள் எதிர்­வரும் வரு­டத்தில் எமக்கு இல­வ­ச­மாக கிடைக்கும்.  

இந்த வாக­னங்­க­ளுடன் உட­னடி சேவையை பெற்­றுக்­கொ­டுக்­க­வென பிரத்­தி­யேக வைத்திய சேவை நிபுணர் ஒருவரும் காணப்படுவார். 2018  காலப்பகுதியில் முழுமையாக இந்த அவசர வைத்திய  முதலுதவி சேவைக்கான அனைத்து தேவைகளும் நிறைவுக்கு கொண்டுவரப்படும்  எனவும் அவர் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment