பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா அவர்களின் அழைப்பின் பேரில், ஏறாவூருக்கு இன்றைய தினம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கீம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏறாவூரில் இரவோடு இரவாக கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கீம் ஏறாவூருக்கு வருகை தருவது புதிதல்ல
இதற்கு முன்னர் கட்டப்படாத கருப்பு கொடிகள் இன்று மட்டும் ஏன் கட்டப்பட்டது. யாரால் கட்டப்பட்டது
என்ற கேள்வி மக்கள் மத்தியிலும், கட்சி பிரமுகர்கள் மத்தியிலும் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இதற்கு காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் வழங்கப்போகும் தேசியப் பட்டியல்தான் காரணமாக இருக்கிறது என்பதனை ஏறாவூர் மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா அவர்களை புறக்கணித்து ஏறாவூரில் ஜனாதிபதி, பிரதமர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முதலானோர் கலந்து கொண்ட கூட்டங்கங்ள் மற்றும் நிகழ்வுகளை முன்னாள் முதலமைச்சர் நடத்திய போதும் இவ்வாறு கருப்புக் கொடிகள் இதற்கு முன் ஏறாவூரில் கட்டப்படவில்லை.
இந்தக் கருப்புக் கொடி கட்டிய சம்பவத்தில் மக்கள் குழப்பமடைய மாட்டார்கள். மாகாண சபை பதவிக் காலம் முடிவடைந்த தினத்திலிருந்து தீயில் மிதித்தவன் போல் சிலர் பதவிக்காக ஓடித் திரிவதனை அவதானிக்கும் போது பதவி மோகம் எந்தளவுக்கு குடி கொண்டுள்ளது என்பது மக்களுக்கு தெரியாமலுமில்லை.
மாகாண சபை முடிவடைந்த நிலையில் தேசியப் பட்டியல் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள இந்நாளில் அம்பாறைக்கான தேசியப்பட்டியலை அம்பாறையில் வைத்து தலைவரிடம் கேட்ட சந்தர்ப்பத்தில் அங்குள்ள போராளிகளால் விரட்டப்பட்ட அரசியல்வாதிதான் இந்த கருப்பு கொடிக்கு சொந்தக்காரன் என மக்கள் பேசுகின்றனர்.
இவைகள் எல்லாம் தேசியப் பட்டியல் கிடைக்காது என்ற ஊகத்தை உண்மைப்படுத்துவதாகவே உள்ளது. இரண்டு பேருக்கு பணம் கொடுத்து இரவோடு இரவாக 100 கருப்புக் கொடிகள் கட்டுவதை விட உண்மையான 10 போராளிகளைக் கொண்டு தலைவர் செல்லும் பாதையில் ஏறாவூருக்கு தேசியப் பட்டியல் வேண்டுமென்று பேயாட்டம் நடத்தியிருந்தால் அது உண்மையாக இருந்திருக்கும்.

0 comments:
Post a Comment