சர்வதேச தர நியமங்களுக்கு அமைவாக இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது சிறைச்சாலை நாளை திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபலெஸ்ஸயிலுள்ள மேற்படி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறைச்சாலையே தற்போது 'சுப்பர் சிறைச்சாலை ' என்று அழைக்கப்பட்டுவருகின்றது. ஏனென்றால் சிறைக்கைதிகளுக்கும் பார்வையிட வருபவர்களுக்கும் உயர் சொகுசு வசதிகள் வழங்கும் வகையில் இந்த சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 9.5 பில்லியன் ரூபா செலவில் 658 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சிறைச்சாலையானது இவ்வருடம் மார்ச்மாதம் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் திறக்கப்படவிருந்த நிலையில் இது பிற்போடப்பட்டது. இச்சிறைச்சாலையானது தங்காலை சிறைச்சாலையின் போதிய வசதிகள் இன்மையால் அங்கு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவரும் சிறைக்கைதிகளுக்கென நிர்மாணிக்கப்பட்டது. சுமார் 1500 சிறைக்கைதிகளை இப்புதிய சிறைச்சாலையில் தங்கவைக்க முடியும்.
இத்திறப்பு விழாவில் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் , நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

0 comments:
Post a Comment