குவைட்டிலிருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் ஆகாய மார்க்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதாஜ் முருகன் (52) எனும் இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் மரண விசாரணையொன்றை மேற்கொண்டு சடலத்தை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment