ஏறாவூர் பிரதேசத்திலிருந்து கடந்த 1991ஆம் ஆண்டு தொழில் நிமிர்த்தம் பொலநறுவை மாவட்டம் வெளிகந்த பள்ளித்திடலுக்கு சென்ற பலர் விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இதனால் ஏறாவூர் பிரதேசத்தில் பல பெண்கள் கணவனை இழந்து விதவைகளாக்கப்பட்டு அன்றுதொட்டு இன்று வரை மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவத்தில் கனவனை இழந்தவர்களுக்கு எந்தவொரு இழப்பீடுகளையும் வழங்குவதற்கு அதிகாரிகளும், புனர்வாழ்வு அமைச்சும் முன்வரவில்லை. இந்தவிடயம் தொடர்பில் சம்மந்தப்பட்டோர் அரசியல்வாதிகளிடம் சென்று முறையிட்டும் எதுவித பலனும் கிடைக்கவில்லை என்கின்றனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் இன்று (10) கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.சுபையிரை சந்தித்து முறையிட்டனர்.
இதுதொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சம்மந்தப்பட்டவர்களை நேரடியாக பிரதேச செயலாளரிடம் அழைத்துச் சென்ற முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.சுபையிர் குறித்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரிடம் வேண்டிக்கொண்டார்.
இதன்பிரகாரம் பாதிக்கப்பட்ட சகலருக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு புனர்வாழ்வு அமைச்சுக்கு தகவல்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு விரைந்து செயற்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிருக்கு பாதிக்கப்பட்டோர் நன்றி தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment