முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (15) காத்தான்குடியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment