ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதி அமைப்பாளராக ஹிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மெளலவி எஸ்.எச்.எம். ஹாரூன் (ஸஹ்வி) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதம் நேற்று (12) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.
சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மெளலவி எஸ்.எச்.எம். ஹாரூன் (ஸஹ்வி) சமூக சேவையில் மிக நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதோடு, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தனது ஹிம்மா சமூக சேவைகள் அமைப்பின் ஊடாக பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துவருகிறார்.
சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எச்.எம். ஹாரூன் மெளலவிக்கு அத்தொகுதி மக்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment