சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாகப் பிரகடணம் செய்மாறு வலியுறுத்தும் சுவரொட்டிகள் பல இன்று (27) வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளை நிராகரிப்போம், வாக்குறுதி தந்தவன் மாறு செய்துவிட்டான். சுயாதீனமாக சுயாதீனமாக ஓரணியில் திரள்வோம் உள்ளூராட்சி மன்றை வெற்றிகொள்வோம். நான்கு பிரிப்பு என்பது சூழ்ச்சி. இனியும் ஏமாற வேண்டாம். துரோகிகளைத் துரத்தியடிப்போம். தனியாகப் பிரிப்பதே தனித்துவமான தீர்வு.
போன்ற வாசகங்கள் அடங்கலாக பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதனை காணமுடிகிறது.

0 comments:
Post a Comment