(எம்.எம்.ஜபீர்)
தேசிய வாசிப்பு மாதம் தொடர்பாக பொது மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் சம்மாந்துறை பிரதேச சபையின் நூலகங்கள் ஒன்றிணைந்து அமீர் அலி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் தலைமையில் இன்று (31) நடைபெற்றது.
வாசிப்பின் சிறப்பை வலியுறுத்திய சுலோகங்களை ஏந்திவாறும், பொது மக்களுக்கு நூலகத்தின் சிறப்பை வலியுறுத்தியவாறும் அம்பாரை பிரதான வீதியூடாக சென்று ஹிஜ்ரா சந்தியூடாக சம்மாந்துறை பிரதேச சபையினை வந்தடைந்தது.
அமீர் அலி பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், பிரதேசத்திலுள்ள நூலகங்களின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பொது மக்களை அறிவுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுங்களும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களால் வினியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, எம்.எம்.முனவ்வர், வீ.சீ நூலகத்தின் நூலகர் ஏ.வீ.எம்.சர்ஜூன், தொழில் நூட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் நூலகங்களின் ஊழியர்கள், வாசகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment