பிரதான செய்திகள்

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட பெண் வேட்பாளர்களுக்கு தட்டுப்பாடாம்..!



உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி யிடும் அர­சியல் கட்­சிகள், சுயேட்சைக் குழுக்­களின் வேட்­பாளர் பட்­டி­யலில் 25 வீதம் பெண்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்டுள்­ளதால், பிர­தான அர­சியல் கட்­சிகள் பெண் வேட்­பா­ளர்­களைத் தேடி அலைய ஆரம்­பித்­துள்­ளன.

எதிர்­வரும் ஜன­வரி மாதம் 335 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­மான தேர்தல்கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான ஏற்பா­டு­களில் தேர்­தல்கள் ஆணைக்குழு இறங்­கி­யுள்­ளது.

புதிய உள்­ளூ­ராட்சித் தேர்தல் சட்டங்­களின் படி, உள்­ளூ­ராட்சி தேர்­தலில் போட்­டி­யிடும் அர­சியல் கட்­சிகள், குழுக்களின் பட்­டியல் 25 வீதம் பெண் வேட்பா­ளர்­களை உள்­ள­டக்­கி­ய­தாகஇருக்க வேண்டும். அவ்­வாறு இல்லாத வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­படும். அத்­துடன் புதிய தேர்­தல்­மு­றையின் படி, 60 வீத­மான உறுப்­பி­னர்கள்  நேர­டி­யா­கவும், 40 வீத­மான உறுப்­பி­னர்கள் விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவ முறையின் கீழும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இந்­நி­லையில்  25 வீதம் பெண் வேட்­பா­ளர்­களை நிறுத்த வேண்டும் என்ற விதி­முறை முதல்­மு­றை­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், அர­சியல் கட்­சிகள் பொருத்­த­மான பெண் வேட்­பா­ளர்­களை தேடத் தொடங்­கி­யுள்­ளன.

சபை ஒன்றில் 25 வீத­மான பெண் வேட்­பா­ளர்கள் நேர­டி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டா­விடின், அங்கு 25 வீத பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்யும் வகையில், விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறையின் கீழ் குறிப்­பிட்ட கட்­சியில் இருந்து பெண் வேட்­பா­ளர்­களை நிய­மிக்­கு­மாறு கோரப்­படும்.

இலங்கை அர­சி­யலில் பெண்களின் பங்களிப்பும், ஆர்வமும் குறைவாகஉள்ள நிலையில், பெண் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக பிரதானஅரசியல் கட்சிகள் மத் தியில் கடும்போட்டிஏற்பட்டுள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment