நியூயார்க்கில் கீழ் மன்ஹாட்டனில் டிரக் ஓட்டுநர் ஒருவர் நடைபாதை மற்றும் சைக்கிள் பாதையில் சென்ற மக்கள் மீது மோதியதால் குறைந்தது 8பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் மேற்கு நெடுஞ்சாலையில் உள்ள பள்ளி அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் லொறி ஒன்றை வேகமாக ஓட்டி வந்து மக்கள் மீது மோதினார்.
மேலும், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுட தொடங்கினார். இந்த திடீர் தாக்குதலில் 8பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் பின்னர் வாகனத்தில் இருந்து வெளிவந்த 29 வயதான ஒருவரை பொலிஸார் சுட்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட இந்த நபர் கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்த குடியேறி என்றும், அவரது பெயர் சய்ஃபுல்லோ சாய்போவ் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:
Post a Comment