இங்கிலாந்தில் தனது 80 வயது மகனை கவனித்துக்கொள்வதற்காக 98 வயது தாய் ஒருவர் மகனுடன் பராமரிப்பு நிலையத்தில் தங்கி வருகிறார்.
டொம் கீட்டிக்கு மேலும் பராமரிப்பு மற்றும் உதவிகள் தேவைப்படுவதால் கடந்த ஆண்டு தொடக்கம் லிவர்பூலில் இருக்கும் பராமரிப்பு நிலையம் ஒன்றில் தங்கி வருகிறார். இந்நிலையில் முதிய தாய் தனது மூத்த மகனை பராமரிப்பதற்காக அதே பராமரிப்பு இல்லாத்தில் சேர்ந்துள்ளார்.
தற்போது அந்த தாயும் மகனும் ஒரே பராமரிப்பு நிலையத்தில் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டும் காலத்தை செலவிடுகின்றனர். டொம் திருமணம் முடிக்காத நிலையில் தனது தாயுடனேயே வாழ்ந்து வந்துள்ளார்.
“ஒவ்வொறு இரவும் நான் டொம்மின் அறைக்கு சென்று நல்லிரவு கூறுவேன், அங்கு சென்று நான் அவருக்கு காலை வந்தனம் கூறுவேன்” என்று அந்த தாய் குறிப்பிட்டார். டொம் ஓய்வு பெறும் முன் கட்டட நிறுவனம் ஒன்றில் அழகுபடுத்துபவராக பணியாற்றி இருப்பதோடு அவரது தாய் தாதியாக பணியாற்றியுள்ளார்.

0 comments:
Post a Comment