விளையாட்டுத்துறை அமைச்சின் 290மில்லியன் ரூபா செலவில் அம்பாரை நகரில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் பிரதான விளையாட்டு மைதானம் உள்ளிட்ட விளையாட்டு கட்டிடத் தொகுதி எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக கண்டரிய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக் குழு அண்மையில் நேரடியாக விஜயம் செய்து விளையாட்டுத் தொகுதியின் வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டனர்.
இவ்விஜயத்தின்போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜேவிக்ரம, விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் சம்பத் திசானாயக்க, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்க, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகர, அம்பாரை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் நளீன் ஜே.விக்கிரம, அமைச்சின் படவரைஞர் குழு மற்றும் தொழில்நுட்ப குழு உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment