பிரதான செய்திகள்

7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக கழிவுத்தேயிலை ஒரு தொகையை டிப்பர் லொறியில் ஏற்றிச்சென்று கொண்டிருந்த இருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலை பகுதியில் இன்று (12) இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சட்டவிரோதமாக அகரப்பத்தனை பகுதியிலிருந்து ஒரு தொகை கழிவுத்தேயிலையுடன் லொறியொன்று வருவதாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் படி பொலிஸார் இந்த சுறிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது சுமார் 7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் டிப்பர் லொறி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. 

மீட்கப்பட்ட லொறியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment